5
அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ் மரத்தில் மோதி விபத்து நேரிட்டதில் பல சிறார்கள் உயிரிழந்தனர் என்று அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் 35 மாணவர்களுடன் சென்ற பஸ் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதிய புகைப்படங்கள் உள்ளூர் மீடியாக்களில் வெளியாகி உள்ளது. பஸ் விபத்தில் சிறார்கள் உயிரிழப்பு தொடர்பாக முரண்பாடான தகவல்கள் வெளியாகி உள்ளது. உள்ளூர் மீடியாக்கள் 6 சிறுவர்கள் உயிரிழந்தனர் என்று செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்கிடையே அரசு தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பாக எந்தஒரு தெளிவான தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. ஏஎப்பி செய்தி நிறுவனம் அதிகாரிகளை தொடர்புக் கொண்ட போது நாங்கள் இதுதொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்று கூறிஉள்ளனர்.
மழலையர் பள்ளியில் இருந்து 35 குழந்தைகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கிஉள்ளது என்று சத்தானோகா போலீஸ் அதிகாரி பிரெட் பிளெட்சர் நிருபர்களிடம் கூறி உள்ளார். 23 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அவர் கூறியதாக என்பிசி செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்கிடையே நகர போலீஸ் நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள டுவிட்டரில் பல சிறார்கள் உயிரிழந்துவிட்டனர், ஆனால் குறிப்பாக எத்தனை பேர் என்பது உறுதிசெய்யப்படவிலலை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பஸ் எவ்வளவு வேகத்தில் சென்றது என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது, இதுவே விபத்திற்கு காரணமாக இருக்கும் என்று பிரெட் பிளெட்சர் கூறிஉள்ளார். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.