பிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹேலண் டோயின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. அதையொட்டி பிரைமரி எனப்படும் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது.
அதில், முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி இடதுசாரி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஓட்டு பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை நடந்தது.
அதில் நிகோலஸ் சர்கோசிக்கு 3-வது இடமே கிடைத்தது. அவர் வெறும் 21 சதவீத ஓட்டுகளே வாங்கினார். அதே நேரத்தில் இவரது அரசில் பிரதமராக இருந்த பிரான்கோயிஸ் பில்லான் 44 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
இவருக்கு அடுத்தபடியாக மூத்த அரசியல்வாதி அலைன் ஜூப்பி 2-வது இடம் பெற்றார். இவர் 28 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார்.
பிரான்ஸ் அரசியல் சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகளை பெற வேண்டும். அவ்வாறு பெறாத பட்சத்தில் 2 மற்றும் 3-வது தடவை மறு வாக்குபதிவு நடைபெறும். 2-வது தடவை நடைபெறும் தேர்தலில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே மீண்டும் போட்டியிட முடியும்.
தற்போது முதலாவதாக நடந்த தேர்தலில் நிகோலஸ் சர்கோசி 21 சதவீதம் வாக்குகளே பெற்று 3-வது இடம் பிடித்துள்ளார். எனவே அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார். மேலும் அரசியல் வாழ்வில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்தார்.
தற்போது நடந்த தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே, 2-வது கட்ட தேர்தல் அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அதில் முதல் 2 இடங்களை பிடித்த பிரான்கோயிஸ் பில்லான், அலைன் ஷீப்பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதில், பிரான்கோயிஸ் பில்லான் வெற்றி பெறுவார் என கருதப்படுகிறது. இதனால் நிகோலஸ் சர்கோசியின் அதிபர் கனவு தகர்ந்ததுடன் அவரது அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டது.