செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பெட்ரோல் நிலையம் மீது வெடிகுண்டு லாரி மோதி 80 பேர் பலி | ஈராக்பெட்ரோல் நிலையம் மீது வெடிகுண்டு லாரி மோதி 80 பேர் பலி | ஈராக்

பெட்ரோல் நிலையம் மீது வெடிகுண்டு லாரி மோதி 80 பேர் பலி | ஈராக்பெட்ரோல் நிலையம் மீது வெடிகுண்டு லாரி மோதி 80 பேர் பலி | ஈராக்

0 minutes read

ஈராக்கில் ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகள், அரசுப்படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். அத்துடன், ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஈராக்கில் உள்ள ஷியா பிரிவினரின் புனித நகரான கர்பாலாவுக்கு ஆன்மிக பயணமாக வந்த ஈரான் நாட்டின் ஷியா பிரிவினர் சிலர், நேற்று அங்கிருந்து பஸ்களில் புறப்பட்டனர். பாக்தாத் அருகே சோமாலி என்ற இடத்தில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக, அவர்களின் பஸ்கள் நின்றன.

அப்போது, ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை ஓட்டி வந்து, அந்த பெட்ரோல் நிலையம் மீது மோதினான். இதனால் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதில், 80 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர், ஈரான் நாட்டில் இருந்து ஆன்மிக பயணம் வந்தவர்கள் ஆவர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.