செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ மரணம்கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ மரணம்

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ மரணம்கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ மரணம்

1 minutes read

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது. கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார், காஸ்ட்ரோ. அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.

காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது.  638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை  தழுவியதாக புகார் கூறப்படுகிறது. வயோதிகம் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு  ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றுவதில்லை. உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்த பிடல் காஸ்ட்ரோ கியூபா நேரப்படி இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக அவரது சகோதரும் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

விதவிதமான சுருட்டுகளை பிடிப்பதில் பிரியம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு பரிசளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட 90 அடிநீளம் கொண்ட சுருட்டு கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.

கியூபாவின் புரட்சித் தலைவர் என்றழைக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவின் உடல் அரசு மரியாதைகளுடன் சனிக்கிழமை காலை தகனம் செய்யப்படும் எனவும் ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 9 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.