தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு உடல்நல கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பல சிகிச்சைகளுக்கு பின் குணமாகி வந்தவருக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
தற்போது பல மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு குணமாவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர் சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர்.
இதனால் கட்சியினரும், பொது மக்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அன்னாரின் மறைவுக்கு எமது சினிஉலகமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.