இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ஆன்மீக குரு சின்மய் குமார் கோஸ் 1964-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு குடி பெயர்ந்தார். மறைந்தாலும் தனது தியான வகுப்புகளால் அமெரிக்க மக்களிடையே பெரும் புகழ் பெற்றவர் சின்மய் குரு.
இந்நிலையில் சின்மய் தியான மையத்தை சேர்ந்த 100 பேர் இவரது சமீபத்திய பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடி புதிய சாதனை படைத்துள்ளனர்.
அதாவது 80.5 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட பிறந்தநாள் கேக்கில் 72,585 மெழுகுவர்த்திகளை ஏற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.
இதற்குமுன் கலிபோர்னியாவில் 50,151 மெழுகுவர்த்திகள் ஒரே கேக்கில் ஏற்றப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.