செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அக்னியில் சங்கமம் ஆகியது முல்லையின் முத்துஅக்னியில் சங்கமம் ஆகியது முல்லையின் முத்து

அக்னியில் சங்கமம் ஆகியது முல்லையின் முத்துஅக்னியில் சங்கமம் ஆகியது முல்லையின் முத்து

1 minutes read

“வீட்டுக்கொரு வீரன் நாட்டைக் காக்க புறப்பட்டால் ஓட்டமெடுப்பான் வெள்ளையன்” என்று வீரவசனத்துடன் வன்னி மண்ணின் கடைசி மன்னன் பண்டார வன்னியனை எம் கண்முண்ணே கொண்டு வந்த “முல்லைமணி” சுப்ரமணியம் அவர்களின் பூதவுடல் இன்று மாலை அக்னியுடன் சங்கமம் ஆகியது.

“சாகித்தியரத்னா” “கலாபூசணம்” “கலாநிதி” ஆகிய விருதுகளையும் பட்டங்களையும் பெற்ற பழம்பெரும் இலக்கிய நாடக வித்தகராக விளங்கிய “முல்லைமணி” என்று அழைக்கப்படுகின்ற அமரர் வே.சுப்ரமணியம் அவர்களின் இறுதி கிரிகைகள் வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரின் மகளின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர்கள், மாகணசபை உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள், கலந்துகொண்டனர்

இன்று நண்பகல் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வானது திரு.ந.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அமரர் முல்லைமணி அவர்களுக்கு அஞ்சலி உரையினை, எழுத்தாளர் திரு.அகளங்கன், வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.குகதாசன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு.மோகன், ஓய்வுபெற்ற அதிபர் திரு.திருஞானம், ஓய்வுபெற்ற உதவிகல்விப் பணிப்பாளர் திரு.பேரின்பநாயகம், அதிபர் திரு.க.சிவலிங்கம், மாகணசபை உறுப்பினர் கௌரவ.லிங்கநாதன், மாகணசபை உறுப்பினர் கௌரவ.கமலேஸ்வரன், மூத்த ஊடகவியளாலர் திரு.அருணா செல்லத்துரை, இளங்கவிஞர் வன்னியூர் செந்தூரன் ஆகியோரின் அஞ்சலி உரையுடன் வன்னிகுறோஸ் கலாசாரப் பேரவையின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவமோகன் அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.

அஞ்சலி உரையினை தெரடர்ந்து அமரர் முல்லைமணி சுப்ரமணியம் அவர்களின் பூதவுடலானது வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் இந்து முறைப்படி தீயுடன் சங்கமாகியது

unnamed (3)

unnamed (1)

unnamed (6)

unnamed (4)unnamed (2)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.