தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USNS Bowditch’ என்ற போர்க்கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆளில்லா தேடும் விமானம் மூலமாக சில ஆய்வுகளை செய்தபோது அந்த ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தும், அதை சீன கடற்படையினர் பறிமுதல் செய்ததற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்ட்டகான்’ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தென்சீனக் கடல் பகுதியில் பறிமுதல் செய்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலை சீனாவே வைத்துக் கொள்ளட்டும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.