விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முற்பட்டமை தொடர்பில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

நேற்று ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாவிட்டால் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என்பதை காவல்துறையினர் மறுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வுpசாரணைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மக்கள் மத்தியில் தவறான கருத்தினை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை பரப்புவதை அனைவரும் தவிர்க்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிநபர்களோ கட்சிகளோ தங்கள் தனிப்பட்ட கருத்தினை வெளியிடலாம் ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதும் ,அந்த அமைப்பிற்காக நிதி சேகரிப்பதும் தவறான விடயம் என என மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலமோ அல்லது வேறு வழிகள் ஊடாகவோ இந்த முயற்சிகளை தொடர்வது தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.