Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை!

ராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை!

2 minutes read

ராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயற்பட நாங்கள் எப்போதும் எண்ணியதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ராஜிவ் காந்தி படுகொலை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர் பேசினார். மேலும் வரலாறு திரும்ப எழுதப்படும் என்றார். அதாவது ராஜிவ் காந்தி படுகொலையை விடுதலைப் புலிகள் நிகழ்த்தியதாக பொருள்படும்படியாக அவரது பேச்சு அமைந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் தமிழின உணர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் தீவிரமாக இயங்கியபோதே அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறினர். இந்நிலையில் சீமான் விடுதலைப் புலிகள்தான் செய்தது என தனது அரசியல் லாபத்துக்காக பேசுவது சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக திரும்பும். மேலும் எழுவர் விடுதலைக்கும் அது பாதகமாக அமையும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் சார்பில் லதன் சுந்தரலிங்கம், குருபரன் சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் “இந்திய தலைமையை சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவை தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சார்ந்த எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ, எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை. திட்டம் தீட்டவுமில்லை. குறிப்பாக எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயற்பட நாங்கள் எப்போதும் எண்ணியதில்லை.

எங்கள் ஆயுத மௌனிப்பின் 10 வருடங்களுக்குப் பிறகும்கூட புலிகளையும் தமிழீழ மக்களையும் இராஜிவ் காந்தி கொலையுடன் தொடர்புபடுத்துவதைக் காணும்பொழுது இந்த கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More