Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ‘சிறுவர் மேதை’ விருதை வென்ற 13 வயது இந்­திய சிறுமி

‘சிறுவர் மேதை’ விருதை வென்ற 13 வயது இந்­திய சிறுமி

1 minutes read

சுஜிதா சதீஷ்க்கான பட முடிவுகள்"

120 மொழி­களில் பாடி ‘சிறுவர் மேதை விருதை’ டு­பாயில் வசிக்கும் 13 வயது இந்­திய சிறுமி பெற்­றுள்ளார்.
டுபா­யி­லுள்ள இந்­தியன் மேல்­நிலைப் பாடசாலையில் படிக்கும் சிறுமி சுஜிதா சதீஷ் (13). 120 மொழி­களில் பாட்டு பாடி­யுள்ளார். இவ­ருக்கு ‘100 குளோபல் சிறுவர் மேதை விருது’ கிடைத்­துள்­ளது. நடனம், இசை, கலை, எழுத்து, நடிப்பு, மொடலிங், அறி­வியல், கண்­டு­பி­டிப்பு மற்றும் விளை­யாட்டு துறையில் சிறந்து விளங்கும் குழந்­தை­க­ளுக்கு இந்த விருது வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த விருதை டாக்டர் அப்துல் கலாம் சர்­வ­தேச அறக்­கட்­டளை, இசை­ய­மைப்­பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்­பட பலர் இணைந்து வழங்­கு­கின்­றனர்.
சுஜிதா சதீஷ்க்கான பட முடிவுகள்"

இந்த விருது கிடைத்­தது பற்றி சுஜிதா கூறு­கையில், ‘‘ஒரே கச்­சே­ரியில் பல மொழி­களில் பாடியும், டுபாயில் உள்ள இந்­திய தூத­ரக ஆடிட்­டோ­ரி­யத்தில் நீண்ட நேரம் நடந்த கச்­சே­ரியில் நான் 12 வயதில் 102 மொழி பாடல்­களை 6.15 மணி நேரத்­துக்கு மேலாக பாடியும் இரு உலக சாத­னை­களை படைத்­துள்ளேன். அதற்­காக நான் ‘100 குளோபல் குழந்தை மேதை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன்’’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More