Thursday, October 22, 2020

இதையும் படிங்க

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

நாளை முதல் மூடப்படுகிறது கொழும்பு மெனிங் சந்தை

கொழும்பு மெனிங் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து...

கொரோனா தொற்று அபாயம் – நாட்டில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தறபோது வெளியாகியுள்ளது. இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை,...

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த தீர்ப்பு வெளியானது

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை)...

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பிரித்தானிய நேரம்...

ஆசிரியர்

வட- கிழக்கு இணைப்புக்கு அடிக்க முயலும் ராஜபக்ச அரசு: சிவசக்தி சீற்றம்!

வடக்கு- கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணியென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி அமைத்துள்ளமையையும், அதற்கு பாதுகாப்பு செயலாளர் ஒய்வு பெற்ற கமால் குணரட்னவை நியமிக்கப்பட்டுள்ளமையையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என குறித்த ஊடகத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது அதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “உண்மையிலேயே இதுவொரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு திட்டத்தின் நீட்சியே.

தமிழர் தாயகத்தில் பௌத்தத்தின் பெயரால், தேசிய பாதுகாப்பின் பெயரால், வன, நிலங்கள், தொல்பொருள் பகுதிகள் என்றெல்லாம் பேரினவாதிகளினால் அகலக்கால் பதித்து வருகின்றார்கள்.

தமிழர்களின் பூர்வீக நிலத்தினை முழுமையாக பறித்து பெரும்பான்மையினரின் தேசமாக மாற்றியமைப்பதற்கு பல்வேறு முனைப்புக்களைச் செய்து வருகின்றார்கள்.

அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அம்பாறையில் 247 இடங்களும், திருகோணமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தினை தனியே கிழக்கு மாகாணத்தினை மட்டும் மையப்படுத்தி பார்க்க முடியாது. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால கோரிக்கை.

ஆனால் பேரினவாதிகளை பொறுத்தவரையில் கொக்கிளாயில் சுமார் 60 சதுர கிலோ மீற்றர்களுக்குள் 5 கடற்படை முகாம்கள், 8 பௌத்த விகாரைகள், 10 இராணுவ முகாம்கள், 4 இராணுவ வியாபார நிலையங்கள் இவற்றுடன் பெரும்பான்மையினரின் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டு வடக்கையும் கிழக்கினையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

இவ்வாறிருக்க, 1932ஆம் ஆண்டிலிருந்து பெரும்பான்மையினர் கிழக்கு நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாபி திட்டம், துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்று அபிவிருத்திட்டங்களின் போர்வையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினர்.

குறிப்பாக கிழக்கில் போர் நிறைவுக்கு வந்திருந்த சூழலில் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கும், அங்கு சிங்களவர்களின் சனத்தொகையை 55சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் அப்போதைய மஹிந்த அரசு திட்டமிட்டிருந்தது.அதற்காக, திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா திட்டங்களின் கீழும் அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது, மகாவலி அபிவிருத்திக் திட்டம், கெடா ஓயா திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் கீழும் குடியேற்றங்களுக்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய பின்னணிகளை வைத்துப் பார்க்கின்றபோது, மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில், தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து இலக்கை அடைவதற்கு விழைகின்றமை வெளிப்படுகின்றது.

அதாவது தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது. இந்த முயற்சிகளுக்கு தொல்பொருளின் பெயரால் காய் நகர்த்தப்படுகின்றது”என  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதையும் படிங்க

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித...

11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித...

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித...

யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

தொடர்புச் செய்திகள்

ராஜபக்சக்களின் இராணுவத்தை கண்டு அஞ்சமாட்டோம்|ஞானசார தேரர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளைமறுதிம் செவ்வாய்கிழமை அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான பௌத்தமத குருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்பதாக பொதுபல சேனா...

சம உரிமையை ஏற்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்; சிவசக்தி ஆனந்தன்

“யாருடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்வியல்ல. யார் எம்தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை...

கூட்டமைப்பு வெல்வதைத்தான் அரசு விரும்புகிறது! வவுனியாவில் விக்கினேஸ்வரன்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மேலும் பதிவுகள்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? | இராணுவ தளபதி

நாட்டில் எந்த பகுதியிலாவது கொரோனா தொற்று ஆபத்து இருந்தால் அந்தப் பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

தோல்விக்கு மும்பைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 32ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில்...

திருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு கொரோனா

குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியசாலையின் 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53...

மிஸ் யூ | பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரபல நடிகை

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல நடிகை ஒருவர் வாழ்த்து கூறி மிஸ் யூ என்று பதிவு செய்திருக்கிறார். கன்னட திரையுலகில்...

முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா...

ஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது!

வலுவான அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடை இன்று ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகியுள்ளது என ஈரானிய வெளிவிவகார அமைச்சு...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

சமைக்க தேவையானவை வேர்க்கடலை - 1 கப், பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிதளவு,இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,சீரகம்,...

துயர் பகிர்வு