இலங்கையில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேரின் விபரம்

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 7 பேர் கடற்படை வீரர்கள் எனவும் ஒருவர் கடற்படையினருடன் நெருங்கி செற்பட்டவர் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நேற்று இரவு 11.50 மணியளவில் 27 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய கொரோனா நோயாளிகளின் முழுமையான எண்ணிக்கை 1683 வரை அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் வரையில் 823 பேர் முழுமையான குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதற்கமைய 849 பேர் வைத்தியசாலை கண்கானிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரையில் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்