உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு உரிய திகதியை விரைவில் அறிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
பரீட்சைகள் நடத்தும் திகதிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தன்னிடம் ஆலோசனை வழங்கியதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அமைச்சரவையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு சரியான திகதியை அறிவிக்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.