Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சுற்றிவளைப்புகளில் 46,617 பேர் சிக்கினர்! பல ஆயுதங்களும் மீட்பு

சுற்றிவளைப்புகளில் 46,617 பேர் சிக்கினர்! பல ஆயுதங்களும் மீட்பு

1 minutes read

கடந்த ஜூன் மாதம் 06ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 46 ஆயிரத்து 617 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 9 ஆயிரத்து 77 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 17 ஆயிரத்து 275 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 ஆயிரத்து140 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 ஆயிரத்து 413 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 415 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் 89 பேரும், வெடிபொருட்களுடன் 10 பேரும், சட்டவிரோத மதுபானத்துடன் 9 ஆயிரத்து 198 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளில் ரி – 56 ரக துப்பாக்கி 11, ரி – 81 ரக துப்பாக்கி 01, 12 துளை கொண்ட துப்பாக்கி 26, கைத்துப்பாக்கி 03, நாட்டுத் துப்பாக்கி 26, ரிபிட்டர் வகை துப்பாக்கி 46, வேறு ஆயுதங்கள் 09, தோட்டாக்கள் 578, வாள் 03, கத்தி 02 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளில் வெடிபொருள் 367 கிராம், டெட்டனேட்டர் 23, கைக்குண்டு 13 ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மதுபானம் 4 இலட்சத்து ஆயிரத்து 876 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More