உலகம் இயல்புக்கு திரும்பும் நம்பிக்கை இல்லை! கைவிரித்த உலக சுகாதார ஸ்தாபனம்

பொது சுகாதார வழிகாட்டல் பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்றுநோய் நெருக்கடி மேலும் மிக மோசமானதாக மாறும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் பல நாடுகள் தொடர்ந்தும் கடுமையாக போராடி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து உலகம் துரித கதியில் மீளும் சாத்தியம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானொம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருந்தவாறு நேரலையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையை விட படுமோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும். இந்த நிலை நீடித்தால் உலகம் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப முடியாது என்பதே வெளிப்படையான உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்