இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 63.20% ஆக உயர்வு

 

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.20% உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட  செய்திக் குறிப்பில்: நாட்டில் கரோனா பாதித்து குணமடைவோர் மற்றும் மரணம் அடைவோரின் விகிதம் 96.05% : 3.95% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் புதன்கிழமை காலை நிலவரப்படி 63.20% ஆ உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 29,429 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 582  போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 24,309 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்காக 3,19,840 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,92,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,36,181 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,67,665 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;  உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,695 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1,47,324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் தில்லியில் 1,15,346 பேருக்கு தொற்று உறுதி் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,446 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்