சசிகலாவை கவிழ்த்து பதவியை கைப்பற்ற சுமந்திரன் முயற்சி?

நடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார்.

கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும், இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. இதனை சசிகலாவும் தனது முகநூல் ஊடாக அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனிடையே திட்டமிட்ட படி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் மாவட்ட செயலக வாக்கெண்ணலில் நேரடியாக நின்றிருக்கின்றமையும் அவர் சுமந்திரனின் தீவீர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சுமந்திரனின் தீவிர ஆதரவாளருமான சயந்தனும் இந்த சூழ்ச்சியின் பின்னால் இருப்பதாக கூறப்படுகின்றது. .இதனையடுத்து சசிகலா ரவிராஜிற்கு ஆதரவு பெருகுவதுடன் சுமந்திரன் தரப்புக்கு எதிர்ப்பு வலுகின்றது.

ஆசிரியர்