இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் | பொதுஜன பெரமுன அமோக வெற்றி

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நேற்று இடம்பெற்ற நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றுள்ளது.

அதன் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 33 இலட்சத்து 30 ஆயிரத்து 591 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேநேரம் 13 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

இதுவரையில் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கான ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய காலியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  430,334 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அதேநேரம் மாத்தறை மாவட்டத்தில் 352,217 வாக்ககளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஆசிரியர்