சுமந்திரன் அவுட் | காரணம் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரன், தேர்தலில் வெற்றி பெற்ற சசிகலா ரவிராஜின் வெற்றியை தனக்கு மாற்றுகின்ற முயற்சிகளில் ஈடுபட்ட போதும் அது பலன் அளிக்கவி்லலை.

தேர்தலுக்கு சில காலங்களின் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் அமைப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் கருத்து கூறினார்.

இக் கருத்து சாதாரண மக்கள் மத்தியில் மாத்திரமின்றி அரசியல் தலைவர்கள் வட்டாரத்திலும் பெரும் எதிர்ப்புக்கு உள்ளாகியது. இந்த தேர்தலில் சுமந்திரனும் கட்சியும் பாரிய தோல்வியை தழுவ இக் கருத்தும் காரணம் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்