சசிகலாவுக்கு தேசியப் பட்டியலில் எம்.பி பதவி வழங்க வேண்டும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்யிட்டு, சுமந்திரனால் பதவி பறிக்கப்பட்ட சசிகலா ரவிராஜிற்கு தேசிய பட்டியல் வாயிலாக எம்.பி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் துணைவி சசிசலா இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் களமிறக்கப்பட்டார். நேற்றைய தேர்தல் முடிவுகளின் படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டு, சுமந்திரனின் பெயர் சொருக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் விருப்பு வாக்கு எண்ணுதலில் மோசடி நடந்துள்ளதாக சசிகலா ரவிராஜூம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இம்முறை வடக்கு கிழக்கில் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25பேரில் ஒரு பெண்கூட இல்லை. அத்துடன் இலங்கை ரீதியாகவும் 196 பேரில் வெறும் 8 பெண் உறுப்பினர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அம்பிகா போன்ற கொழும்பு பெண்களுக்கு எம்பி பதவியை வழங்காமல் சசிகலாவுக்கு வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மத்தியிலேயே கருத்து வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் தமது தேசியப் பட்டியல் எம்.பி பதவிக்கு சசிகலா ரவிராஜை நியமித்து, மாமனிதர் ரவிராஜ்மீது உண்மை பற்றை கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடல் தேர்தலில் மோசடி செய்து பதவி பறிக்கப்பட்ட சசிகலாவுக்கும் ஒரு ஆறுதலை தருவதாக இந்த முடிவுகள் அமையக்கூடும் என்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்