March 26, 2023 10:59 pm

சுமந்திரன் பதவியேற்க்க இடைக்கால தடை உத்தரவு | சசிகலாவுக்கு ஆதரவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மாமனிதர் ரவிராஜின் மனைவியார் சசிகலாவுக்கு, எதிராக செய்யப்பட்டது பெரும் சதியை முறியடிக்க யாழில் சற்று முன்னர் பெரும் கூட்டணி ஒன்று இணைந்துள்ளது. கட்சி பேதங்களை மறந்து. தாம் யாருடன் நிற்கிறோம் என்பதனை கூட மறந்து, தமிழர்களாக ஒன்றினைந்துள்ளார்கள் அரசியல்வாதிகள். அதிலும் அங்கஜன் ராமநாதன் , தானே தேடிச் சென்று சசிகலாவையும் , சிவாஜிலிங்கத்தையும் ஆனந்தியையும் சந்தித்துள்ளார்.

திங்கட்கிழமை கொழும்பில் தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு. உச்ச நீதிமன்றில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க்க இடைக்கால தடை உத்தரவு ஒன்று பெறப்பட உள்ளது. இதனை தானே முன் நிறு நடத்துவதாக சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில். தன்னிடம் கையில் சல்லி காசு கூட இல்லை. எல்லாம் தேர்தலில் செலவாகி விட்டது. ஆனால் சொத்தை விற்றாவது நான் இதனை செய்கிறேன் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சுமந்திரனுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு போடப்பட உள்ள வழக்கு செலவிற்காகவது புலம் பெயர் தமிழர்கள் உடனடியாக நிதி வழங்க வேண்டும். சசிகலாவிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவி அவருக்கே கொடுக்கப்பட வேண்டும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்