Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 26 புதிய அமைச்சர்கள் | 39 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

26 புதிய அமைச்சர்கள் | 39 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

5 minutes read
புதிய இராஜாங்க அமைச்சர்களின் ...

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது.

அமைச்சர்கள்

  • கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்
  • மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர்
  • நிமல் ஸ்ரீபாலடி சில்வா – தொழில் அமைச்சராக பதவியேற்றார்
  • ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சராக பதவியேற்றார்
  • பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சராக பதவியேற்றார்
  • தினேஷ் குணவர்தன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பதவியேற்றார்
  • டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார்
  • காமினி லொக்குகே – போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார்
  • பந்துல குணவர்தன – வர்த்தகத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • R.M.C.B. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்
  • ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார்
  • ஹெகலிய ரம்புக்வல – வெகுசன ஊடக அமைச்சராக பதவியேற்றார்
  • சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவியேற்றார்
  • விமல் வீரவன்ச – கைத்தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • மஹிந்த அமரவீர – சுற்றாடல்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • எஸ்.எம்.சந்திரசேன – காணி விடயம் தொடர்பான அமைச்சராக பதவியேற்றார்
  • மஹிந்தானந்த அளுத்தகமே – கமத்தொழில் அமைச்சராக பதவியேற்றார்
  • வாசுதேவ நாணயக்கார – நீர்வழங்கல் துறை அமைச்சராக பதவியேற்றார்
  • டலஸ் அழகப்பெரும மின்சக்தித்துறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவியேற்றுள்ளார்
  • உதய கம்மன்பில – வலுசக்தி துறை அமைச்சராக பதவியேற்றார்
  • ரமேஷ் பதிரன – பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • ரோஹித அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக பதவியேற்றார்
  • நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்
  • அலி சப்ரி – நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்

இராஜாங்க அமைச்சர்கள்

1. உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் – சமல் ராஜபக்ஸ

2. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் – பிரியங்கர ஜயரத்ன

3. சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – துமிந்த திசாநாயக்க

4. பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர

5. சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – லசந்த அழகியவன்ன

6. சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளை

7. தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் – அருந்திக்க பெர்னாண்டோ

8. கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – நிமல் லன்சா

9. குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் – ஜயந்த சமரவீர

10. காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ரொஷான் ரணசிங்க

11. கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் – கனக ஹேரத்

12. தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – விதுர விக்ரமநாயக்க

13. கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் – ஜானுக்க வகும்பர

14. அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் – விஜித்த பேருகொட

15. சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ஷெஹான் சேமசிங்க

16. உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் – மொஹான் டி சில்வா

17. தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த

18. வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – திலும் அமுனுகம

19. வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் – விமலவீர திசாநாயக்க

20. பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் – தாரக்க பாலசூரிய

21. கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் – இந்திக்க அனுருத்த

22. அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் – கஞ்சன விஜேசேகர

23. கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சனத் நிஷாந்த

24. மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – சிறிபால கம்லத்

25. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் – சரத் வீரசேகர

26. கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – அனுராத ஜயரத்ன

27. தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சதாசிவம் வியாழேந்திரன்

28. கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் – தேனுக விதானகமகே

29. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் – சிசிர ஜயகொடி

30. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – பியல் நிஷாந்த டி சில்வா

31. பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் – பிரசன்ன ரணவீர

32. விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – டி. பி.சானக்க

33. கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் – டி.பி. ஹேரத்

34. நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் – ஷஷீந்திர ராஜபக்ஸ

35. நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் – நாலக்க கொடஹேவா

36. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – ஜீவன் தொண்டமான்

37. நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் – அஜித் நிவாட் கப்ரால்

38. திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் – சீதா அரம்பேபொல

39. ஒளடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் – சன்ன ஜயசுமன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More