Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரருக்கு கொரோனா!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரருக்கு கொரோனா!

1 minutes read

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டேவிட் வில்லிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்த டேவிட் வில்லி, தற்போது தானும், தனது மனைவியும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

30 வயதான வில்லி கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக விளையாடினார்.

வில்லி இதுவரை 49 ஒருநாள் மற்றும் 28 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் இறுதியாக 2018ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More