ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் விராட் கோலி 1 சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 50 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த சிக்ஸர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலியின் 200 வது சிக்ஸராகும்.
இதன்மூலம், 200 சிக்ஸர்கள் அடிக்கும் 5 வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். இந்த மைல்கல்லை எட்டும் 3 வது இந்திய வீரர் கோலி.
200 க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
கிறிஸ் கெயில் – 336 சிக்ஸர்கள்
ஏபி டி வில்லியர்ஸ் – 231 சிக்ஸர்கள்
மகேந்திர சிங் தோனி – 216 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா – 209 சிக்ஸர்கள்