Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழக் கவிதைகளை முதன் முதலில் தமிழ்நாட்டில் பதிப்பு செய்த க்ரியா ராமகிருஷ்ணன்

ஈழக் கவிதைகளை முதன் முதலில் தமிழ்நாட்டில் பதிப்பு செய்த க்ரியா ராமகிருஷ்ணன்

7 minutes read

ஈழக் கவிதைகளுக்கும் தமிழகத்திற்கும் இடையில் ஒரு பிரிக்க முடியாத வாசிப்பு தொடர்பு இன்று காணப்படும் நிலையில், முதன் முதலில் ஈழக் கவிதைகளை க்ரியா ராமகிருஷ்ணனே பதிப்பு செய்துள்ளார் என்பதும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல் ஆகும்.

இன்று தமிழகத்தில் ஈழ நூல்கள் பலவும் பதிப்பு செய்து வெளியிடப்படுகின்றன. இதன் முன்னோடி க்ரியா ராமகிருஷ்ணனே. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

தமிழக எழுத்தாளர்கள் மாத்திரமின்றி, ஈழ எழுத்தாளர்களும் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முகநூல் பதிவொன்றில் க்ரியா ராமகிருஷ்ணன் பதிப்பித்த நூல்களை ஈழத்தை சேர்ந்த பத்மநாப ஐய்யர் பட்டியில் படுத்தியுள்ளார்.

01.

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்(கவிதைத் தொகுப்பு) எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா1984 | 216 பக்கங்கள் | விலை: ரூ. 20.00 | ISBN 81-85602-26-3ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் சில முக்கியமான போக்குகளைப் பிரதிபலிக்கும் பதினொரு கவிஞர்களின் 55 கவிதைகளைக் கொண்டது இத்தொகுதி. 1960 முதல் 1984 வரையுள்ள சுமார் இருபது ஆண்டுகாலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. மஹாகவி முதல் சேரன் (கவியரசன்) வரை ஐந்து தலமுறைக் கவிஞர்களின் படைப்புகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அவ்வகையில் இருபது ஆண்டுகளையும் ஐந்து தலைமுறைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்குகிறது எனலாம்.

02.

முற்போக்கு இலக்கியம்மு. தளையசிங்கம்1984 | 48 பக்கங்கள் | விலை. ரூ. 5.00 | ISBN 81-85602-29-8முற்போக்கு இலக்கியம்’ என்ற தலைப்பில் ‘கலைச்செல்வி’ இலங்கை இதழ் நடத்திய கருத்தரங்கத் தொடரில் கலந்துகொண்டு மு. தளையசிங்கம் எழுதிய கட்டுரை இது.டிசம்பர் 62, ஜனவரி 63, பிப்ரவரி 63 ஆகிய மூன்று இதழ்களில் இக்கட்டுரை ‘கலைச்செல்வி’யில் வெளிவந்தது. புத்தக வடிவில் வெளியிடும்போது சில திருத்தங்களைச் செய்வது அவசியம் என்றாலும், ஆசிரியர் மறைந்துவிட்டதினால் அவற்றைச் செய்ய முடியவில்லை. ஆகையால், பத்திரிகையில் வெளியான வடிவத்திலேயே இக்கட்டுரை வெளியானது.

03.

அறியப்படாதவர்கள் நினைவாக…!(கவிதைத் தொகுப்பு) அ. யேசுராசா1984 | 34 பக்கங்கள் | விலை ரூ. 8.00 | ISBN 81-85602-32-8உன்னுடையவும் கதி…கடற்கரை இருந்து நீவீடு திரும்புவாய்அல்லது,தியேட்டரில் நின்றும்வீடு திரும்பலாம்.திடீரெனத் துவக்குச் சத்தங் கேட்கும்,சப்பாத்துகள் விரையும் ஓசையும் தொடரும்:தெருவில் செத்து நீவீழ்ந்து கிடப்பாய்உனது கரத்தில் கத்திமுளைக்கும்:துவக்கும் முளைக்கலாம்!‘பயங்கர வாதியாய்ப்’பட்டமும் பெறுவாய்,யாரும்ஒன்றும் கேட்க ஏலாது.மெளனம் உறையும்:ஆனால்மக்களின் மனங்களில்,கொதிப்பு உயர்ந்து வரும்.அறியப்படாதவர்கள் நினைவாக…! தொகுப்பிலிருந்து

04.

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சிமு. தளையசிங்கம்1984 | 178 பக்கங்கள் | விலை: ரூ. 8.00 | ISBN. 81-85602-33-61956 முதல் 1963 வரையான ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சியைக் கணிப்பதை இலக்காகக் கொண்டு, இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்றின் மீது மு. தளையசிங்கம் செலுத்தும் பார்வை இப்புத்தகத்தின் தனித்தன்மை. நபர்களின் மீதான பார்வையிலிருந்து போக்குகளையும், போக்குகளின் மீதான பார்வையிலிருந்து நபர்களையும் அணுகும் இவருடைய நிலைகள் ஒன்றோடொன்று பின்னியும், பிரிந்தும் ஆக்கபூர்வமான இலக்கிய விமர்சனமாகவும், வரலாறாகவும், ஒரு சமூகத்தின் மனோ அலசலாகவும், அதன் காரணமாக இலக்கியமாகவும் மாறிமாறித் தோற்றம் கொள்கின்றன. நம் விமர்சனப் பார்வைகளை விரிவாக்கக் கூடிய புத்தகம்.

05.

நமக்கென்றொரு புல்வெளி(கவிதைத் தொகுப்பு) வ. ஐ. ச. ஜெயபாலன்1987 | 106 பக்கங்கள் | விலை ரூ. 12.00 | ISBN. 81-85602-44-1யாழ்ப்பாணத்தில் பிறந்த வ. ஐ. ச. ஜெயபாலன் தற்கால ஈழத்துக் கவிஞர்களிலேயே மிகவும் முக்கியமானவர். இலக்கியம் மட்டுமின்றி, சமூக, அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘சூரியனோடு பேசுதல்’; ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’ என்ற தலைப்பில் நீண்ட காவியம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

06.

தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம்1989 | 376 பக்கங்கள் | விலை 75.00 | ISBN. 81-85602-50-6தமிழில் சிறுகதை பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும், அது வளர்ந்துள்ள வரலாற்றையும் ஆராய்கிறது இந்த நூல். 19ஆம் நூற்றாண்டில் உதயதாரகை, விவேகசிந்தாமணி போன்ற சஞ்சிகைகளில் எழுதப்பட்ட சிறுகதைகளில் தொடங்கி, சுப்பிரமணிய பாரதி, மாதவய்யா, வ. வே. சு. ஐயர் முதலியவர்களின் படைப்புகள், பின்னர் மணிக்கொடி மூலம் புகழ் பெற்ற பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு. ப. ரா., மெளனி முதலியோர் வழியாக அடுத்த இரு தலைமுறைகளில் சிறுகதை வளர்ந்த வரலாற்றை ஆராய்கிறது இந்த நூல்.

07.

குறுந்தொகை1stபக்கங்கள் : 184ISBN 978-93-82394-06-8விலை: ரூ. 170 + அஞ்சல் செலவுஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் கவிதைகளை ‘குறுந்தொகை’ என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர் இளமையில் நாட்டுப்பாடல்கள், தேவார திருவாசகங்கள், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நந்தனார் சரித்திரத்தின் சில பகுதிகள், மறுமலர்ச்சிக் கால ஆங்கிலக் கவிதைகள் என அங்குமிங்குமாக அகப்பட்ட கவிதைகள், பாடல்கள் எல்லாவற்றையும் ஈடுபாட்டுடன் வாசித்தார். அவர் தன்னுடைய முதல் கவிதையான ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதும் முன்னர் பக்கம்பக்கமாகக் கவிதைகள் எழுதியிருந்தார். அவற்றுள் பாரதியாரின் சாயல் இருந்தது. ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதி முடித்தபோதுதான் அவர் தன்னை ஒரு கவிஞனாக உணர்ந்தார். இன்றுவரை சங்கப் புலவர்களின் அஞ்சலோட்ட தீபத்தை முன் னெடுத்துச் செல்வதில் அவர் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை இந்த நூலுக்கான விமர்சனங்க  வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

08.

பொடுபொடுத்த மழைத்தூத்தல்: கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்தொகுப்பு: அனார்பக்கங்கள் : 72ISBN 978-93-82394-02-0விலை: ரூ. 150 + அஞ்சல் செலவுஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இத்தொகுப்பிலும் இரண்டு மக்களுடைய கவிகளும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இன்றைய உலகமயமாக்கல், அறிவுப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது.அதுதான் நாம் இன்னும் அடைய முடியாத ஒன்றாகவும் உள்ளது. தேசம், இயற்கை, மொழி, பண்பாடு, தொன்மையான மனிதனின் நாகரிகம் போன்றவற்றை அறிந்துகொள்ள முயல்வது இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம்.முற்றிலும் இயற்கையான பசுமையுடனும் நீருடனும் காற்றுடனும் நெருப்புடனும் பறவைகளோடும் விலங்குகளோடும் பிணைந்த இன்னொரு வாழ்க்கையின் மணத்தைப் பூரணமாக உணர்ந்துகொள்ளவும் முடியும். முழுக்கமுழுக்க உணர்விலிருந்து வெளிப்படுகிற மண்பாட்டுக்கள் இவை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பழுக்கற்ற வாசனை, ஆணினதும் பெண்ணினதும் கண்களிலிருந்து காதலெனத் தெறிக்கின்றன. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர் ஒருபோதும் அழிவற்றது.

09.

சரமகவிகள் First Edition: November 2011/ This edition by Cre-A:, December 2019ISBN 978-93-82394-45-7Price: Rs. 125 + Postageஉளவடுவை (trauma) கவிதையுடன் தொடர்புபடுத்தும்கருத்தமைவை முதன்முறையாகச் சமகாலத் தமிழ் இலக்கியச்சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். அந்த வகையில் சரமகவிஎனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை’ உளவடுவுடன்இணைக்கும் இவரது இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும்மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும்போர் அனுபவங்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒரு தளத்தைக்கட்டமைக்கிறது.பரிச்சயமான சொற்களையும் படிமங்களையும் உடைப்பதன்மூலம்இவருடைய குறுகத் தரித்த கவிதை மொழி உருவாகியிருக்கிறது.போரும், தொடரும் வன்முறைகளும் ஊடாடும் சமகால உலகக்கவிதைகளின் பிரத்தியேகமான, பன்முகத் தன்மை கொண்டமொழியுலகுடன் இந்தக் கவிதை மொழி தன்னைச் சமாந்தரமாக அடையாளப்படுத்திக்கொள்கிறது.

தொகுப்பு – வணக்கம் லண்டன் செய்தியாளர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More