Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா புற்றுநோயாால் உடைந்த நடிகர்! உதவிகோரி கண்ணீர்

புற்றுநோயாால் உடைந்த நடிகர்! உதவிகோரி கண்ணீர்

1 minutes read
Actor-Thavasi-struggling-with-cancer

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் தவசி. இவரை இப்படி சொல்வதை விட கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒற்றை வசனத்தில் ரசிகர்களிடம் பிரபலமானவர். முரட்டு மீசை, கிராமத்து பெரியவர்களுக்கே உரிய தோரணை என கிராமத்து தொடர்பான கேரக்டர்களை தனது நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தும் இவர், கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்தார்.

இப்போது அவரின் தோற்றத்தை பார்த்தவர்கள் மிகவும் அதிர்ந்து போய் உள்ளனர். காரணம் உடல் மெலிந்து ஆள் ஆடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கூட போதிய பணமின்றி அவதிப்படுகிறார். அவருக்கு உதவி கேட்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடன் நடித்த முன்னணி நடிகர்கள் உதவ முன்வார்களா.?



திமுக., எம்.எல்.ஏ., டாக்டர்.சரவணன் உதவி

நகைச்சுவை நடிகர் தவசி, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எங்களது சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம்.

11.11.2020 அன்று மிகவும் முற்றிய நிலையில் எங்களது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம்.

இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தார்க்கு பேருதவியாக இருக்கும் என திமுக., எம்.எல்.ஏ., டாக்டர்.சரவணன் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More