தேவையான பொருட்கள்
புதினா இலை – கைப்பிடி அளவு
எலுமிச்சை – 1 1/2 பழம்
இஞ்சி – சிறிய துண்டு
தேன் – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவைக்கு
தண்ணீர் – 3 டம்ளர்.
செய்முறை
புதினா, இஞ்சி, எலுமிச்சம் பழத்தை சுத்தம் செய்யவும். புதினாவில் தண்டை நீக்கி, இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். புதினா தண்டை துாக்கி எறியாமல், மண்ணில் நட்டு வைத்தால், புதினா செடி வளர்ந்து விடும்.
புதினா இலை, தோல் சீவிய இஞ்சியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து, ஐஸ்கட்டிகளையும் போட்டு அரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகள், தேன் ஊற்றி, வடிகட்டிய புதினா சாறு போட்டு பரிமாறினால், குளுகுளு புதினா ஜூஸ் தயார். விரும்பினால் அலங்காரத்திற்கு சில புதினா இலைகள், சிறிய துண்டு எலுமிச்சை பயன்படுத்தலாம். புதினா விழுதை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.