Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அடிமுடி தெரியாத அற்புத நெருப்பு மாமனிதர்கள் கரும்புலிகள்: நிலவன்

அடிமுடி தெரியாத அற்புத நெருப்பு மாமனிதர்கள் கரும்புலிகள்: நிலவன்

4 minutes read

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள். எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

-தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் தரைக் கரும்புலிகள் மறைமுகக் கரும்புலிகள் கடற் கரும்புலிகள் வான் கரும்புலிகள் எனப் படைப்பிரிவுகளைக் கொண்டு திகழ்ந்தார்கள்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கரும்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது. போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.

‘கரும்புலிகள்’ (Black Tigers) என்பது தற்கொடைப் பிரிவைச் சேர்ந்தவர்களைக் குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தைமுன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காகத் துறப்பதற்கு எப்பொழுதுமே தயாராய் இருப்பவர்கள். இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே குப்பி (சைனைட்) கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர். கரும்புலிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதை விட தமது உயிரைக் கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மிக அரிதாக அவர்கள் தப்பித் திரும்பி வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. எப்படியிருந்த போதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும் போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காகவும் தியாகம் செய்யத் தயாராகவே இருப்பார்கள்.

மறைமுகக் கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடை நீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத் தாக்குதலை நடத்துபவர்கள்.

வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவ நிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவு நாட்களில் அவர்களின் பெயர் அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கௌரவமும் வழங்கப்பட்டுக் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர்.

தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்படமாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெற மாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே மறைமுகக் கரும்புலிகள்.

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல தமிழர்கள் தான் விடுதலைப் புலிகள் என உலகத்துக்கு எடுத்துக் கூறியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். கரும்புலிகள். உலகளாவிய ரீதியில் வல்லரசு நாடுகளிலும் கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் பேசப்பட்டது. சக்திமிக்கதொரு விடுதலைப் புலிகளின் தற்கொடைப் படை- தரை கடல் வானிலும் எங்கள் வீர வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்கள் எங்கள் கரும்புலிகள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் கரும்புலிகளின் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன்மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கரும்புலிகள் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும் வீராங்கனையும் சாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் தங்களுடைய சாவு எப்போது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது பல கரும்புலித் தாக்குதல்களில் ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்குமதிகமான வீரர் வீராங்கனைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். போர் வீரர்களில் கரும்புலிகள் நிலை வேறுபட்டது. களம் புகுவதற்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய வீரச்சாவை தெரிந்து விடுகிறார்கள். நாள் குறித்து அடுத்த நிமிடத்தில் சாகப்போகிறேன் என்ற உண்மையை பூரணமாக தெரிந்து கொண்டுதான் கரும்புலிகள் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு சென்று இலக்கினை அழித்தார்கள்.

போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு விநியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்கரும்புலிகள் அணிதான்.

இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் பல தாக்குதல்களில் 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள். 2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

தரையிலும் கடலிலும் வான் தாக்குதல்கள் புலிகளாளும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, ஆண்கள், பெண்கள் என 350க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரமிகு வரலாறுகளைகளைப் படைத்து வீரச்சாவடைந்துள்ளார்கள். இவற்றைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன. 2009 ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தற்கொடைத் தாக்குதல்களை நடத்தினார்கள். இவை வெளிப்படையாக பேசப்படும் தாக்குதல்கள். இவற்றைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன.

தேச பக்தியையும் வீர உணர்வையும் அடித்தளமாக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தமையால் உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும் என பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. 2009 முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.

பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். ‘பலவீனமான என் இனத்தின் பலம்.

நிலவன் (அவுஸ்ரேலியா)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More