Sunday, October 24, 2021

இதையும் படிங்க

பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் தற்போது பெய்த...

இலங்கையில் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்!

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்...

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

இசையமைப்பாளர் இனியவன் மரணம் அடைந்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு...

அதிபர் – ஆசிரியர்களுக்காக 64 பில்லியனை வழங்க முடியாதா? | ஜே.வி.பி. கேள்வி

அநாவசிய செலவுகளுக்காக அரசாங்கம் கடந்த 16 மாதங்களில் 1300 பில்லியன் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு 64 பில்லியனை...

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் | சுதந்திரக் கட்சி

பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கமைய அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது. அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமாயின்...

மேல் மாகாணத்தில் சிறப்பு நடவடிக்கை | 948 பேர் கைது

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 948 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று...

ஆசிரியர்

தியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்

அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,

நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு இன்னும் நனவாகவில்லை. நீங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய பிரச்சினைகள்  இன்றும் தீரவில்லை, உண்மைய சொல்ல போனால், பிரச்சினை இன்னும் பெரிசாகிட்டுது. ஆனால் உங்களை போல எங்களுக்காக போராட இன்றும் யாரும் முன்வாரதில்லை… பாராளுமன்ற கதிரைகளுக்காக தான் போராடினம்.

செப்டம்பர் 15, 1987 அன்று காலையில் பிரதித்தலைவர் மாத்தையா அழைத்து வர நல்லூர் கந்தன் முன்றலில் வயதான அம்மா ஒருவர் நெற்றி திலகமிட்டு ஆசி வழங்க, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகால சட்டம் நீக்கல், ஊர்காவல் படையினரின் ஆயுத களைவு மற்றும் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் என்ற ஜந்து கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரத மேடையேறினீர்கள். 

உண்ணாவிரத்தின் இரண்டாம் நீங்கள் ஆற்றிய உரை தமிழர் தேசமெங்கும் பாரிய உணர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக “எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன் அதுவே எனது இறுதி ஆசை” என்று நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் எதிரொலிக்கின்றன.

அண்ணா, உங்களிற்கு பின் ஆயிரமாயிரம் மறவர்களை விதைத்தும் நமது மண்ணில் விடுதலை விருட்சம் முளைவிடவில்லையே என்ற ஏக்கம் மரணத்திலும் எம்முடன் பயணிக்கும். “திலீபனின் பசியடங்க, செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்” என்றான் ஒரு ஈழத்து கவிஞன்.. உண்மைதான், அன்று தீரும் எங்கள் சுதந்திர தாகம்..

திலீபன் அண்ணா, உங்களை நீராவது அருந்தச்சொன்ன நண்பர்களிற்கு நீங்கள் கூறிய பதில்,  2009 ஏப்ரல் மாத இறுதியில்  தமிழீழத்தில் இனப்படுகொலையை எதிர்கொண்டிருந்த உறவுகளை காப்பாற்ற, சென்னை மரீனா கடற்கரையில் தலைமாட்டில் மனைவியும் கால்மாட்டில் துணைவியும் வீற்றிருக்க, சில மணித்துளிகள் உண்ணாவிரத நாடகம் போட்ட வசனகர்த்தா கலைஞரிற்கு நீங்கள் எழுதி வைத்துவிட்டு சென்ற திரைக்கதை.

“உண்ணாவிரதம் என்றால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”

திலீபன் அண்ணா, உங்களது உண்ணாவிரத மேடைக்கருகில் அன்று பல நூறுபேர் உணர்ச்சி பொங்க பேசினார்கள், உணர்வு நிறைந்த கவிதை படைத்தார்கள். உதயன், முரசொலி, ஈழநாதம், ஈழமுரசு பேப்பர் எல்லாம் நீங்கள் தான். யாழ்ப்பாண மக்களின் மையப்புள்ளியாக நீங்கள், உங்களை இந்தியா சாகவிடாது என்ற நப்பாசையுடன் சனம். அந்த நாட்களில் வெளிவந்த பலநூறு கவிதைகளில் இன்றும் எனது நினைவை விட்டகலா வரிகளிவை…
“தேச பிதாவே, தேசபிதாவேபாரதத்தின் தேசபிதாவே எங்களூர் திலீபனை உங்களுக்கு தெரியுமா” 

உங்கள் முதலாவது ஆண்டு நினைவு நாள் வரும்போது, யாழ்ப்பாணம் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மூச்சுவிடக்கூட முடியாது திணறிக்கொண்டு இருந்தது. உங்கள் நினைவு பாடல்களை சுமந்து கொண்டு வெளிவந்த  cassetteஐ இரகசியமாக வீட்டுக்கு வீடு அனுப்பியது இயக்கம். கரண்ட் வாற நேரம் volumeஐ குறைத்து விட்டு கேட்ட பாடல்கள் இன்றும் நினைவலைகளில் ஒலிக்கின்றன. 

“மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன் முகமே ஞாபகம், காற்றலைகள் உன் பெயரை காலமெல்லாம் பாடிடும்”… காலத்தால் அழிக்க முடியாதா காசி ஆனந்தன் வரிகள்.http://youtu.be/9WPJ-sU5ggo

“பாடும் பறவைகள் வாருங்கள், புலி வீரன் திலீபனை பாருங்கள்” என்ற பாடலை பாடி கொடுத்துவிட்டு அழுதபடியே ஸ்டூடியோவை விட்டு வாணி ஜெயராம் வெளியேறினாராம். http://youtu.be/bo7e3URZrX8

அண்ணா, சில நாட்களிற்கு முன்னர் 1986ல் கைதிகள் பரிமாற்றம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த யாழ்ப்பாணம் வந்த விஜயகுமாரணதுங்கவின் விஜயம் பற்றிய வீடியோ பார்த்தேன். அதில், அன்றைய யாழ்ப்பாண அரசியல் துறை பொறுப்பாளர் ரஹீம் உங்களை “அமிர்தலிங்கம்” என்று அறிமுகபடுத்துவார். பிறகு விசாரித்ததில் நீங்கள் அரசியல் துறையிலிருந்ததால் அது உங்கட பட்டபெயர் என்றறிந்தேன். 

செப்டெம்பர் 26, 1987 ஒரு சனிக்கிழமை, புரட்டாசி சனி நாள். காலை 10.58 மணிக்கு உங்கள் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் சிவகுமரன் உங்கள் பாதம் தொட்டு வணங்க 265 மணித்தியாலங்கள் நீங்கள் நிகழ்த்திய யாகம் முழுமையடைந்தது. 

அன்றும் எங்களிற்கு பாடசாலை நடந்தது. செய்தி வந்ததும், உடனடியாக மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டோம். அன்றிரவு நண்பர்களுடன் நல்லை முன்றலில் உங்கள் வித்துடலிற்கு இறுதி மரியாதை செலுத்தியதும் சுதுமலையில் நடந்த மாபெரும் இறுதி அஞ்சலி கூட்டமும் இன்னும் நினைவிலிருக்குது. கூட்டத்தின் இறுதியில் உங்கள் விருப்பத்திற்கமைய உடல் யாழ் பல்கலைகழக மருத்துவபீடத்திற்கு கையளிக்கப்பட்டது.  நீங்கள் உயிரோடு உலாவியிருக்க வேண்டிய மருத்துவ பீடம், உங்கள் புகழுடலை தனதாக்கிக்கொண்டது. 

அண்ணா, யாழ்ப்பாண கோட்டையில் புலிக்கொடி பறக்கும் என்று நீங்கள் முழங்கினீர்கள. நீங்கள் காவியமாகி 3வது நினைவுதினத்தில் யாழ்ப்பாண கோட்டையில் புலிக்கொடி பறந்தது. நீங்கள் காவியமான அதே நேரத்தில் அன்றைய யாழ்ப்பாண தளபதி பானு கோட்டையில் புலிக்கொடியை ஏற்றினர். அதேபோல் உங்களது தாயக கனவும் நனவாகும், மறவர்களின் தியாகம் வீணாகாது என்று இன்றும் நம்புகிறோம்…நம்பிக்கை தானே வாழ்க்கை..

திலீபன் அண்ணா, நீங்கள் உங்கள் இன்னுயரை தேசத்திற்காக, மக்களுக்காக ஆகுதியாக்கிய போது உங்களுக்காக எம்மினமே தலைவணங்கியது. உங்கள் உயிரை தியாகம் செய்து இனத்தை காப்பாற்ற முன்வந்த தியாகத்தின் சிகரம் நீங்கள். இலட்சிய வேட்கையோடும் தளராத மனவுறுதியோடும் போராடிய எங்கள் நிஜ Hero நீங்கள். 

அதனால் தான் அண்மையில் நல்லூரில் உங்கள் நினைவுதூபி இருந்த இடத்திலிருந்து தம்பி ஜேகே எழுதிய பதிவில் “சிதைக்கப்பட்ட திலீபன் நினைவுதூபியை பார்க்கும்  ஒவ்வொருவரும் அதை மனதில் ஸ்தாபித்து கொள்கிறார்கள்”, என்றார்.  உண்மை தான்.. 34 ஆண்டுகளிற்கு முன்பு உங்களிற்கு எங்கள் மனங்களில் கட்டிய துயிலுமில்லத்தில் இன்றும் நாங்கள் சுடரேற்றுகின்றோம். 

இதையும் படிங்க

நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது!

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 81ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு...

13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக!

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ்...

இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!

அதன்படி, சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசியைளும் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரி பொறுப்பேற்றார்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ...

கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் – ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை!

கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த...

தொடர்புச் செய்திகள்

தலையில் சூடி கொள்ளும் மல்லிகைப்பூவில் இத்தனை மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளதா?

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.

நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது!

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 81ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு...

13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாரதி கண்ணம்மாவில் இனி வெண்பாவாக நடிக்கப் போவது குக்வித் கோமாளி பிரபலம்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பிரிந்து வாழும் கணவன்...

இலங்கையின் முன்னணி சிங்கள நடிகை காலமானார்

இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார். இறக்கும் போது அவருக்கு 64 வயது. உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு...

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

மேலும் பதிவுகள்

ஓ மணப்பெண்ணே | திரைவிமர்சனம்

நடிகர்ஹரிஷ் கல்யாண்நடிகைபிரியா பவானி சங்கர்இயக்குனர்கார்த்திக் சுந்தர்இசைவிஷால் சந்திரசேகர்ஓளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ்...

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம், உரத்தை பற்றிய பேச்சு!

சுமந்திரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே வயலை உழத் தொடங்கினார், பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்...

இதுவரை வீழாத இந்தியா | டி20 உலக கோப்பை | இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை. 7-வது 20 ஓவர் உலக கோப்பை...

மாகாணசபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும்

மாகாணசபைத் தேர்தல்களை இலக்குவைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய...

55 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே.இ.தீவுகள் | 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

சூப்பர் 12 சுற்றில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை தோற்கடித்து 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் தனது...

கடாபியின் நிலைமை கோட்டாவுக்கும் வரும் என்கிறாரா விமல்?

அரசியல் ரீதியில் தீர்மானமிக்க பயணத்தை நோக்கி பயணிக்கிறோம். டொலருக்காக  மனசாட்சிக்கு விரோதமாக அரசியல் செய்ய முடியாது. ஆகவே ஒன்றிணைந்த...

பிந்திய செய்திகள்

தலையில் சூடி கொள்ளும் மல்லிகைப்பூவில் இத்தனை மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளதா?

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.

நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது!

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 81ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு...

13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக!

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ்...

இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!

அதன்படி, சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசியைளும் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச்...

சினம் தவிர்த்தால் சிகரம் தொடலாம்

கோபப்படும் சமயத்தில்தான் அவசரப்பட்டு சிந்திக்காமல் முடிவுகளை எடுத்து அவதிப்படுகிறோம். அதனால் தான் கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

துயர் பகிர்வு