October 4, 2023 6:32 pm

பொரளை தேவாலயத்தில் வெடி குண்டு மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மேலுமொரு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குறித்த தேவாவலயத்தின் ஊழியரான பிரான்சிஸ் முனிந்திரன் (முனி) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்று சந்தேகநபர்களில் ஏற்கனவே மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்