செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் திருமண ஊர்வலம் சென்ற மணமகன் உள்ளிட்ட 9 பேர் பலி

திருமண ஊர்வலம் சென்ற மணமகன் உள்ளிட்ட 9 பேர் பலி

0 minutes read

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்ற வேன் விபத்துக்கு உள்ளானது.

கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லொரி மீது மோதியது.

இந்த விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் லொறி சாரதியை கைது செய்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More