செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி விசா கட்டணம் உயர்வு

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி விசா கட்டணம் உயர்வு

1 minutes read

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும், சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் கட்டணம் உயரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு அக்டோபர் 4 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More