December 2, 2023 6:52 pm

ஆட்குறைப்பில் ஈடுபடும் LinkedIn – 668 ஊழியர்கள் வேலையிழப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
லிங்ட்இன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்ட்இன் தளத்தில், 668 ஊழியர்கள் வேலையிழக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், திறனாளர் சேர்ப்பு, நிதிப் பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் இவ்வாறு நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் காரணமாக, இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக லிங்ட்இன் தளம், ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்கிறது.

20,000 ஊழியர்களை கொண்ட அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளவர்களின் எண்ணிக்கை 3 சதவீதமாகும்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தொழில்நுட்ப நிறுவனங்களில் 141,516 ஊழியர்கள் வேலை இழந்தனர்.

அத்துடன், கடந்த வருடம் இந்த எண்ணிக்கை ஆறாயிரமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்