December 3, 2023 1:01 am

குண்டெறிதலில் தங்கம் வென்ற யாழ் மைந்தன் !

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த எஸ். மிதுன் ராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

 

 

34ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்றைய தினம் சாம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பமானது.

எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிறு வரை நடைபெறவுள்ள இப்போட்டி விழாவில் நாடு முழுவதிலிருந்தும் 15 வயது முதல் 29 வயது வரையான 3000 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டி விழாவில்,  15  -20 , 21 – 29  என்ற இரண்டு வகையான வயதுப் பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இருபாலாருக்கும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்