December 7, 2023 12:02 am

உலகக் கிண்ண போட்டியின் நடுவே கோஹ்லியை கட்டிப்பிடித்த பாலஸ்தீன ஆதரவாளர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

2023 ஆம் ஆண்டுக்காள ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இப் போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் போது உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடிச் சென்று கோஹ்லியை கட்டிப்பிடித்தார். இதனால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது.

போட்டியின் 13வது ஓவரின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பாலஸ்தீன கொடியுடன்  ‘Free Palestine” என்ற வாசகம் எழுதிய ரீசேர்ட்டுடன் மைதானத்திற்குள் ஓடிச் சென்று இந்திய வீரர் கோஹ்லியை கட்டிப்பிடித்தார்.

இதன்போது சாதுரியமாக செயற்பட்ட கோஹ்லி அதிலிருந்து விலகிச்சென்றார்.

உடனடியாக செயற்பட்ட மைதான பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்