பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டி | ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக, ஒல்லி ரொபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்போட்டியில் விளையாடவுள்ள முழுமையான அணி விபரத்தை பார்க்கலாம்,

ஜோ ரூட் தலைமையிலான அணியில் ஜேம்ஸ் எண்டரசன், ஜொஃப்ரா ஆர்சர், டொமினிக் பெஸ்,ஸ்டூவர்ட் பிராட், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸெக் கிராவ்லி, சேம் கர்ரன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், டொம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதலாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி 21ஆம் திகதியும் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர்