Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இங்கிலாந்துடன் டெஸ்ட் |பாகிஸ்தான் அணி தடுமாற்றம்!

இங்கிலாந்துடன் டெஸ்ட் |பாகிஸ்தான் அணி தடுமாற்றம்!

1 minutes read

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி போட்டியின் நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், மொஹமட் ரிஸ்வான் 4 ஓட்டங்களுடனும், பாபர் அசாம் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் பிரோட், சேம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

சவுத்தம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, மழையின் குறுக்கீடின் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி இன்று தொடரவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More