Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு கரீபியன் பிரீமியர் லீக் | கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக் | கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி!

1 minutes read

கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணியும் சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் மோதின.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கயானா அமேசோன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, லீவிஸ் 30 ஓட்டங்களையும், பென் டங்க் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது, கயானா அமேசோன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், கீமோ போல் 4 விக்கெட்டுகளையும், தாஹிர் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் கிரீன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 128 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கயானா அமேசோன் வோரியஸ் அணி, 17 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கயானா அமேசோன் வோரியஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சிம்ரொன் ஹெட்மியர் 71 ஓட்டங்களையும், சந்தர்போல் ஹெம்ராஜ் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியின் பந்துவீச்சில், ராயட் எம்ரிட் 3 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரெல் மற்றும் டொமினிக் ட்ரேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கீமோ போல் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More