Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது

தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது

1 minutes read
தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது

மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது.

விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் அந்தந்த துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை மத்திய விளையாட்டுதுறைக்கு பரிந்துரை செய்யும்.

விருதை பெறுவதற்கு இவர்கள் தகுதியான நபர்கள்தானா? என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு கடந்த சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்தது.


இந்நிலையில் இன்று விருதுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அட்னானு தாஸ் (வில்வித்தை), டூட்டி சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்), சுபேதர் மணிஷ் கவுசிக், லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) உள்ளிட்டமொத்தம் 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More