Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 30 வயதிற்குப் பின் கிரிக்கெட்டில் அசத்திய சாதனையாளர்

30 வயதிற்குப் பின் கிரிக்கெட்டில் அசத்திய சாதனையாளர்

2 minutes read

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சௌத்ஹம்ப்டன் ஏஜியஸ் போல் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் 600 விக்கெட்களைக் கைப்பற்றி வீழ்த்தி இந்த அரிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் ஆடுதளத்தில், வானிலை உள்ளிட்ட சூழ்நிலையில் பந்துவீசும் திறன் கொண்ட ஜேம்ஸ் அண்டர்சன், 30 வயதுக்கும் மேல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கொட்னி வோல்ஷுக்கு அடுத்தபடியாக 2 ஆவது இடத்தில் உள்ளார்.

அண்டர்சன், கடந்த செவ்வாயன்று, பாகிஸ்தானின் அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய போது அதன் தலைவர் அஸார் அலியை ஆட்டமிழக்கச் செய்த நிலையில், டெ்ஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதன் மூலம் 38 வயதான ஜேம்ஸ் அண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்களைப் பூர்த்தி செய்த முதலாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குரிய சாதனையையும் ஜேம்ஸ் அண்டர்சன் நிலைநாட்டியுள்ளார்.

156 போட்டிகளில் 291 இன்னிங்ஸ்களில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் அண்டர்சன், இங்கிலாந்தில் 89 டெஸ்ட்களில் 384 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன்,  வெளிநாடுகளில் 67 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

இந்திய மண்ணில் 10 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும், தென்னாபிரிக்க மண்ணில் 10 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 32 போட்டிகளில் 104 விக்கெட்டுகளை மொத்தமாக வீழ்த்தியுள்ளார். இதில் அவுஸ்திரேலியாவில் 18 போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 22 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளை வீழ்த்திய அண்டர்சன் மேற்கிந்தியத் தீவுகளில் 10 டெஸ்ட் போட்டிகளில் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

ஆசியாவில் மொத்தமாக  22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  60 விக்கெட்டுகளையே அண்டர்சன் கைப்பற்றியுள்ளார்.

 இதேவேளை,  30 வயதுக்கும் மேல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்  கொட்னி வோல்ஷ்  கைப்பற்றியுள்ளார். அவர் 81 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 341 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, அண்டர்சன் 85 டெஸ்ட் போட்டிகளில் 332 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின கிளென் மெக்ராத் 30 வயதுக்கு மேல் 65 போட்டிகளில் விளையாடி 287 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் ஹேட்லி 51 டெஸ்ட்களில் விளையாடி 276 விக்கெட்டுகளையும், அலன் டொனால்ட் 47 டெஸ்ட்களில் விளையாடி  216 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More