
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகிறது.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி வரும் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உட்பட பல தொடர்கள் இரத்தான நிலையில் நடக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுவாகும்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடக்கும் இந்தப் போட்டியில் இரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 53.4 மில்லியன் டொலர் என்பதுடன் இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா 3 மில்லியன் டொலரும் இரட்டையர் பிரிவில் தலா 4 இலட்சம் டொலரும் அறிவிக்கப்பட்டுள்ளது.