அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், மூன்றாவது சுற்றுப் போட்டியில், டோமினிக் தியேம் மற்றும் சோபியா கெனின் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், குரேஷியாவின் மரின் சிலிக்கை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்குகளில் டோமினிக் தியேம் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் சோபியா கெனின், துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூருடன் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் சோபியா கெனின் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.