பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வேவிற்கு கொரோனா

பிரான்ஸ் தேசிய மற்றும் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கழக அணியின் இளம் முன்கள வீரரான கிலியன் எம்பாப்வேவிற்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரேஷியா அணிக்கெதிரான போட்டியைத் தவறவிடுகிறார்.

அணி வீரர்களிடமிருந்து விலகி வைக்கப்பட்டுள்ள கிலியன் எம்பாப்வே, தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற நேஷன்ஸ் லீக் தொடக்க சுவீடன் அணிக்கெதிரான போட்டியில், 21 வயதான கிலியன் எம்பாப்வே ஒரு கோல் அடித்தார்.

ஆசிரியர்