சாதனை செய்த யுப்புன் அபேகோனுக்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து!

சில சாதனைகளை முறியடித்துள்ள இலங்கை வீரர் யுப்புன் அபேகோனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் சில சாதனைகளை முறியடித்துள்ளார்.

இதற்கமைய அவர், ஜேர்மனியில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்துள்ளார்.

இந்தநிலையிலேயே அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஜேர்மனியில் நடைபெற்ற தடகள போட்டியில் யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10.16 வினாடிகளில் நிறைவுசெய்து இலங்கை மற்றும் தெற்காசிய மட்டத்தில் சாதனை படைத்தமை குறித்து செய்தி அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த சாதனை இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரையும் பெருமையடைய செய்துள்ளது. வாழ்த்துக்கள்“ என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்