முதல் ஒருநாள் போட்டி |அவுஸ்ரேலியா- இங்கிலாந்து இன்று மோதல்!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்போட்டியானது இன்று (வெள்ளிக்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதி சுற்றான 10ப்பர் லீக்கில் இந்த தொடரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அணியின் வெற்றிக்கு 10 புள்ளிகளும், சமநிலை அல்லது முடிவு கிடைக்காமல் போனால் 5 புள்ளிகளும் வழங்கப்படும். அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுவரை இரு அணிகளும் 147போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அவுஸ்ரேலியா அணி 81 முறையும் 61 முறை இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

ஆசிரியர்