டொமினிக் – அலெக்ஸாண்டர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் டொமினிக் தியோம் மற்றும் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் ஆகியோர் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று, டோமினிக் தியேம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், ஸ்பெயினின் பப்லோ கரேனோ புஸ்டாவும் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்குகளில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

ஆசிரியர்