முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு முத்தமிட்டார் டோமினிக் தியேம்!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலகின் மூன்றாம் நிலை வீரரான டோமினிக் தியேம் வெற்றிக்கொள்ளும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற சம்பியன் பட்டம் இதுவாகும்.

மகுடத்திற்கான இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இப்போட்டியில் 27 வயதான ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், ஜேர்மனியின் இளம் வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் 6-2, 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி பறிபோகும் விளிம்பில் இருந்த டோமினிக் தியேம், ஆக்ரோஷமாக விளையாடி 6-4 என செட்டைக் கைப்பற்றி ஆறுதல் அடைந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற செட்டிலும் சிறப்பாக விளையாடிய ஸ்வெரவ், 6-3 என செட்டைக் கைப்பற்றினார்.

இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட் பரபரப்பரடைந்தது.

டை பிரேக் வரை நீண்ட இந்த செட்டில், டோமினிக் தியேம், ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடி செட்டை 7-6 என கைப்பற்றி சம்பியன் பட்டத்துக்கு முத்தமிட்டார்.

ஆசிரியர்