Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பர்முயுலா-1 | துஸ்கான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹாமில்டன் முதலிடம்!

பர்முயுலா-1 | துஸ்கான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹாமில்டன் முதலிடம்!

1 minutes read

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஒன்பதாவது சுற்றான துஸ்கான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் ஒன்பதாவது சுற்றான துஸ்கான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, நேற்று முகல்லோன் ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 309.497 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹாமில்டன் பந்தய தூரத்தை 2:19:35.060 மணி நேரத்தில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பென்ஸ் அணியின் மற்றொரு வீரரான வால்டெரி போட்டாஸ், 4.440 வினாடிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 19 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, 8.064 வினாடிகள் பின்தங்கிய நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்த ரெட் புல் அணியின் வீரரான அலெக்சாண்டர் அல்பன் 15 புள்ளிகளை பெற்றுக்கொண்டார்.

நடப்பு ஆண்டு பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரில் இதுவரை ஒன்பது சுற்றுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், லீவிஸ் ஹாமில்டன் 190 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி போட்டாஸ் 135 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 110 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பத்தாவது சுற்றான ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 27ஆம் திகதி இதே சோச்சி ஒட்டோட்ரோம் ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More