Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் | முதல் சுற்றில் யார் வெற்றி!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் | முதல் சுற்றில் யார் வெற்றி!

1 minutes read

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், ரபேல் நாடால், டோமினிக் தியேம், செரீனா வில்லியம்ஸ், கிகி பெர்டன்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், பெலராஸின் எகோர் கெராசிமோவ்வை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் நடால், வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், குரேஷியாவின் மரின் சிலிக்குடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் டோமினிக் தியேம் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சகநாட்டு வீராங்கனையான கிறீஸ்டி அன்னை எதிர்த்து விளையாடினார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.


மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ், உக்ரேனின் கட்டரினா சவாட்ச்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இப்போட்டியில் 2-6, 6-2, 6-0 என்ற செட் கணக்குகளில் கிகி பெர்டன்ஸ், வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More